Followers

Powered by Blogger.
RSS

காங்கேசன்துறை கடற்பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை மீட்கும் பணி இன்று ஆரம்பம்!



காங்கேசன்துறை கடற்பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை மீட்கும் பணி; இந்தியத் தூதுவர் இன்று ஆரம்பித்து வைப்பார்;

காங்கேசன்துறை கடற் பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களை மீட்கும் பணியை இந்தியா இன்று ஆரம்பிக்கின்றது.

கடந்த கால யுத்தத்தின் போது புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்கள் காங்கேசன்துறை கடலில் இன்னமும் உள்ளன. அவற்றை மீட்க இந்தியா உதவ முன் வந்துள்ளது. வருட முடிவுக்குள் அவற்றை மீட்டு அகற்று வதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பணியை இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கவிருக்கிறார். பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கு பற்றுகின்றார்.

இந்தப் பணி பூர்த்தியடைந்த பின்னர் அடுத்த வருட ஆரம்பத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமையப் படுத்தும் வேலைகள் ஆரம்பமாகும்.
இந்தத் திட்டத்துக்கு 40 மில்லியன் டொலரை இந்திய அரசு செலவிட உள்ளது என்றும் நடுத்தர கப்பல் வந்து செல்லக் கூடிய வகையில் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை பலாலி விமான நிலையத்தில் இந்திய அரசால் அமைக்கப் பட்ட ஓடுபாதையையும் தூதுவர் இன்று பார்வையிடுவார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment