Followers

Powered by Blogger.
RSS

"உலகப் புகழ் ரூபிக்"

ரூபிக்
1974 ம் வருடம் ஹங்கேரி (Hungary) நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ ரூபிக் ( Ernő Rubik) என்பவரால் உலகப் புகழ்பெற்ற "ரூபிக்" (படத்தில்) எனும் பொழுதுபோக்கு (விளையாட்டு) கருவி கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிடகலைஞரும் வடிவமைப்பாளருமான "யுர்நோ ரூபிக்" தனது காப்புரிமம் செய்யப்பட்ட ரூபிக் விற்பனை மூலமாக பெருமளவு பணத்தினையும் புகழையும் பெற்றுள்ளார். 30 வருடங்களின் மேலாக உலகின் எல்லா மட்டங்களிலுமுள்ள மக்களையும் ஈர்த்துவிட்ட ரூபிக் பற்றிய சுவையான தகவல்கள் வருமாறு.

  • 1974 ம் வருடம் பல்கலைக்களகத்தில் முப்பரிமான கற்பித்தல் தேவைக்கு வடிவமைக்கப்பட்ட மாதிரி காட்சிபொருள் "ரூபிக்" எனும் புரட்சிகர கண்டுபிடிப்பாக வரலாற்றில் மாறியது.
  • ரூபிக் (3*3) கட்டையானது 9 சிறு சதுரங்களைக் கொண்ட 6 வித்தியாசமான வர்ணங்களிலால் ஆக்கப்பட்ட முப்பரிமான சதுர குற்றியாகும்.
  • ஆரம்பத்தில் "மஜிக் கியூப்" (Magic Cube) என அழைக்கப்பட்ட போதிலும் 1980 ம் வருடத்திலிருந்து "ரூபிக்ஸ் கியூப்" (Rubik’s Cube) எனும் பெயர் மாற்றம் பெற்று விற்பனைக்கு வந்தது முதல் இன்றுவரை மாறாது நிலைத்துவிட்டது.
  • 1982 ம் வருடம் ஒக்ஸ்போர்ட் அகராதியில் "RUBIK" எனும் சொல் முதல்முதலாக சேர்க்கப்பட்டது.
  • ஹங்கேரிய நாட்டில் 1982 ம் வருடம் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நபர் (Minh Thai) 22.95 செக்கனில் ரூபிக் தீர்வுகண்டதன் மூலம் முதலாவது உலகசாதனை பதிவு செய்தார்.
  • ரூபிக் ஆர்வம் காரணமாக பல தொலைக்காட்சி , மேடை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சர்வதேசரீதியில் நடைபெறு வருகின்றது. அத்துடன் ரூபிக் பற்றியதான பல மில்லியன் கணக்கிலான புத்தகங்களும் இதுவரை வெளியாகியுள்ளமை இதன் மகிமையை காட்டுவதாக உள்ளது. 1981 ம் வருடம் 12 வயது பிரித்தானிய மாணவன் (Patrick Bossert) எழுதி வெளியிட்ட "உங்களாலும் ரூபிக் புதிர் செய்ய முடியும்" (You Can Do the Cube) எனும் புத்தகம் மட்டும் 1.5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்க செய்தி.
  • தயாரிப்பு வரிசையில் தங்கம் (பொன்) , வைரம் , mp3 பதிக்கப்பட்ட ரூபிகளும் ஆடம்பர பொருட்களாக தயாரிக்கப்பட்டுள்ளன.
  • 2003 ம் வருடத்திலிருந்து ஆண்டுதோறும் ஹங்கேரி நாட்டில் தொடர்ச்சியாக உலக ரூபிக் சம்பியன் நிகழ்ச்சிகளை ரூபிக் நிறுவனம் நடாத்திவருகின்றது.
  • மனிதன் மட்டுமல்ல இயந்திர மனிதரும் (ரோபோ) ரூபிக் புதிருக்கு போட்டியிடுவது வழமையாகிவிட்டது.
  • விஞ்ஞானிகள் ரூபிக் மூலமாக ஒக்ரபஸ் (octopus) எனும் கடல்வாழ் விலங்கின் அறிவினை பரிசோதித்துள்ளனர்.
  • ரூபிகினை அதிகம் பயிற்சி பெற்றவர்கள் 17 தொடக்கம் 45 நகர்வுகளுக்குள் தீர்வு காண்கின்றனர். எனினும் கணித முறையில் இதற்குரிய தீர்வு வழிகள் 43 கூயின்ரிலியன் (43,252,003,274,489,856,000) நகர்வுகள் என கணிக்கப் பட்டுள்ளது. அதாவது ஒருசெக்கனில் ஒரு நகர்வு செய்வீர்களாயின் முழு நகர்வும் செய்துமுடிக்க 1,400 மில்லியன் மில்லியன் வருடங்கள் தேவைப்படுமாம் !.
  • 10 செக்கனிலும் குறைவான காலத்தில் முதல்முதலாக 2007 ம் வருடம் பிரஞ்சு நாட்டினை சேர்ந்த நபர் (Thibaut Jacquinot ) 9.86 செக்கனில் (ரூபிக் புதிர் சரிசெய்ததில்) உலகசாதனை செய்தார். பின்பு 2008 ம் வருடம் நடைபெற்ற சாதனை நிகழ்வில் பிறிதொரு நபர் (Erik Akkersdijk) ரூபிக் கட்டையை சரிசெய்து புதிய உலகசாதனை படைத்தார்.
  • ஹங்கேரி நாட்டின் 2009 ம் வருட உலக ரூபிக் சம்பியன் போட்டிகளில் 32 நாடுகளைச்சேர்ந்த 300 பேர் பங்குபற்றினர். இம்முறை போட்டிகளில் ஒரு கையினால் மட்டும் , கண் மூடியபடி என ரூபிக் புதிர் வினோத வழிகளிலும் தீர்வுகாணும் போட்டி புகுத்தப்பட்டது.
  • உலகிலுள்ள சகல தரப்பு மக்களையும் ஆட்டிப்படைக்கும் ரூபிக் புதிர் இன்று இணைய விளையாட்டாகவும் , கணனி விளையாட்டாகவும் மாறிவிட்டது. மேலும் ரூபிக் பயிற்சி செய்யவென வகுப்புகளும் , நேர அளவுகளும் (Rubik's Cube timer ) கூட இணையத்தில் பெருகிவிட்டன.
  • தொடர்ந்து வீறுநடைபோடும் ரூபிக் விற்பனை மூலமாக பலமில்லியன் வருமானத்தினை யுர்நோ பெற்று வருகின்றார். யுர்நோ தனது முதலாவது 3*3 ரூபிக் பின்னதாக மிகவும் சிக்கலான 4*4 , 5*5 ரூபிக் புதிர்களையும் வடிவமைத்து விற்பனைக்கு விட்டுள்ளார். இதுவரை உலகம் முழுவதுமாக 300 மில்லியனிலும் மேலான ரூபிக் கட்டைகள் விற்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் இந்த புதிர் கட்டை மட்டுமே விளையாட்டு பொருட்களில் அதிகம் விற்பனையானது என்ற சாதனையை படைத்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காங்கேசன்துறை கடற்பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை மீட்கும் பணி இன்று ஆரம்பம்!

காங்கேசன்துறை கடற்பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களை மீட்கும் பணி; இந்தியத் தூதுவர் இன்று ஆரம்பித்து வைப்பார்;

காங்கேசன்துறை கடற் பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களை மீட்கும் பணியை இந்தியா இன்று ஆரம்பிக்கின்றது.

கடந்த கால யுத்தத்தின் போது புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்கள் காங்கேசன்துறை கடலில் இன்னமும் உள்ளன. அவற்றை மீட்க இந்தியா உதவ முன் வந்துள்ளது. வருட முடிவுக்குள் அவற்றை மீட்டு அகற்று வதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது.

இந்தப் பணியை இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கவிருக்கிறார். பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்த நிகழ்வில் பங்கு பற்றுகின்றார்.

இந்தப் பணி பூர்த்தியடைந்த பின்னர் அடுத்த வருட ஆரம்பத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமையப் படுத்தும் வேலைகள் ஆரம்பமாகும்.
இந்தத் திட்டத்துக்கு 40 மில்லியன் டொலரை இந்திய அரசு செலவிட உள்ளது என்றும் நடுத்தர கப்பல் வந்து செல்லக் கூடிய வகையில் துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை பலாலி விமான நிலையத்தில் இந்திய அரசால் அமைக்கப் பட்ட ஓடுபாதையையும் தூதுவர் இன்று பார்வையிடுவார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள்-டக்ளஸ் தேவானந்தா!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள்-டக்ளஸ் தேவானந்தா

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் (24) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவர்கள் எமது மக்களுக்கான அரசியல் புனரமைப்பு அபிவிருத்தி மற்றும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள் என்றும் நடைபெறவுள்ள மாகாணசபைக்கான தேர்தலின் போது மக்கள் இதை உணர்ந்து கொண்டு சரியான தீர்ப்புக்களை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அரசை மக்கள் புறக்கணித்துள்ளனரா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது இது ஒரு தவறான புரிந்துணர்வு என்பதுடன் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு தவறான பிரச்சாரங்கள் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் இந்தத் தவறான பிரச்சாரங்களால் வழிநடாத்தப்பட்டதன் விளைவுகளை எமது மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும் இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மொழிவாதம், இனங்களைத் தூண்டி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரச்சாரம் தொடர்பில் இங்குள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு சரியான வழிகளை எடுத்துக் காட்டவில்லை என்பதுடன் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கோ உணர்வுகளுக்கோ ஏற்ப சரியாக செயற்படவில்லை. அத்துடன், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உள்ளுராட்சி வேட்பாளர் ஒருவர் ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்டமை தொடர்பாக கேட்ட போது இச்சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. அத்துடன் எம்மீது திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இனவாதத்தை நம்பியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எமது ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை மக்களுக்கான தனது செயற்பாடுகளை மிகத்தரமான முறையில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் அங்குள்ள எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா நகர சபையை கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனால் அச்சபையை சரியாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஈ.பி.டி.பி. கட்சி சார்பில்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமிழ்ப் பிரதிநிதிகளே என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை என்றும் தேர்தல் முடிவுகள் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஏனெனில் இது, எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது உள்ளூர் மற்றும் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS